தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் |
1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு, மும்பையில் பாராட்டு விழா நடந்தது. இயக்குநர் பால்கி ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்று இளையராஜாவுடன் தாங்கள் பணியாற்றிய படங்கள் குறித்து தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
''அன்னக்கிளி'' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தனது மயக்கும் இசையால் ரசிகர்களை கொள்ளை கொண்டவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். 40 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வரும் இளையராஜா இப்போது 1000-மாவது படத்திற்கு இசையமைத்து உள்ளார். பாலாவின், தாரை தப்பட்டை படம், இளையராஜாவுக்கு 1000-மாவது படமாகும்.
இதையொட்டி அவரை கவுரவிக்க முடிவு செய்தார் பிரபல பாலிவுட் இயக்குநரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான பால்கி. அதன்படி தான் இயக்கியுள்ள ஷமிதாப் படத்தின் ஆடியோ வௌியீட்டு விழாவுடன், இப்படத்தின் இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கும் பாராட்டு விழா நடத்திவிட்டார் பால்கி. மும்பையில் நடந்த இந்த விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார் அமிதாப், தொடர்ந்து நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் இளையராஜாவுக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.
மேலும் இளையராஜாவுடன் தாங்கள் பணியாற்றிய விதம் குறித்து தங்களது மலரும் நினைவுகளையும் மேடையில் பகிர்ந்து கொண்டனர் அமிதாப், ரஜினி, கமல்.
இந்த விழாவில், அமிதாப், ரஜினி, கமல் தவிர்த்து அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஜெயா பச்சன், போனி கபூர், தனுஷ், அக்ஷ்ரா ஹாசன், ஸ்ருதிஹாசன், சரிகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.